மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் திரைப்படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.
புனீத் ராஜ்குமாரின் 47வது பிறந்தநாளையொட்டி, 47 ஆட்டோக்களில் அவரது ரசிகர்கள் திரையரங்குக்கு அணிவகுத்து சென்று படம் பார்த்தனர்.
மேலும், புனீத் ராஜ்குமாரின் படம் வெளியானதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகள் விழா கோலம் பூண்டது.