இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பசுமையான, தூய்மையான எரிபொருள் தீர்வுக்காகப் பன்னாட்டுத் தானியங்கித் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து இந்திய அரசு மேற்கொண்ட முன்னோடித் திட்டத்தின் ஒருபகுதியாகும்.
ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட மின்சார வாகனங்களில் ஒன்றான டொயோட்டாவின் மிராய் வகைக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டது.
பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும்.