நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8கோடியே 22 லட்சமாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக பேசிய அவர், 2021 மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 136கோடியே 60 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தவும், வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தொடர்ச்சியான நினைவூட்டல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.