ரஷ்யாவிடமிருந்து மூன்றரை மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா விரைவில் கையெழுத்திட உள்ளது.
மிகவும் குறைக்கப்பட்ட விலையில் இந்த எண்ணெய் ஒப்பந்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.கச்சா எண்ணெய்யை சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கும் பொறுப்பையும் காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்க இருக்கிறது.
இதனிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் பேரலுக்கு 100 டாலராகக் குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.