2017 முதல் 2021 வரையான ஐந்தாண்டுக் காலத்தில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதி நாலரை விழுக்காடு குறைந்துள்ள நிலையில் ஐரோப்பாவில் 19 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சுவீடனின் ஸ்டாக்கோமில் உள்ள பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் 39 விழுக்காட்டை அமெரிக்கா கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா 19 விழுக்காடும், பிரான்ஸ் 11 விழுக்காடும், சீனா, ஜெர்மனி ஆகியன நாலரை விழுக்காடும் பங்கைக் கொண்டுள்ளன.
இதேபோல் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவும் சவூதி அரேபியாவும் சமமாக 11 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளன. அதையடுத்த இடங்களில் எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா, கத்தார், தென்கொரியா ஆகியன உள்ளன. உலக அளவில் ஆண்டுக்கு 7 இலட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுத வணிகம் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.