உக்ரைன் - ரஷ்யப் பிரதிநிதிகள் இடையிலான 4-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
காணொலி மூலம் இரு நாட்டு பிரதிநிதிகளும் போர் நிறுத்தம் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு ஏற்படாததால் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தன.
உக்ரைன் அதிபரின் ஆலோசகரும், சமாதானக் குழுவில் அங்கம் வகிப்பவருமான Mykhailo Podolyak வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்ததிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், எண்ணிக்கையில் அடங்கா சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து தெளிவான முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.