உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உருவம் பொறித்த முகமூடிகள் அதிகளவில் விற்பனையாவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக ஹோலி விற்பனை மிகவும் மந்த நிலையில் இருந்த தாகவும் தற்போது நல்லமுறையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். மோடி முகமூடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கடை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தண்ணீர் துப்பாக்கிகள், கலர் பொடிகள் என ஹோலி பண்டிகை கொண்டாட தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.