வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, முடிவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயராக இருப்பதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.