இந்தியாவில் கோவிட் தடுப்பூசி டோஸ்கள் 180 கோடியைத் தாண்டி விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.
இதன் காரணமாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மாலை 7 மணி நிலவரப்படி 17 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டது. .இதற்காக நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.