மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் குறைந்து வருவதால் அக்கட்சி எதிர்க்கட்சித் தகுதியை இழக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சித் தகுதியைப் பெற ஒரு கட்சி குறைந்தது 25 விழுக்காடு உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி 34 உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் குஜராத் கர்நாடக மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தகுதியை அது தக்க வைக்க முடியும்.