உத்தரபிரதேச தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு சற்று அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் ஐந்தாயிரத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் அந்த கட்சி 0.43சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.