இந்தியாவின் மொத்த பெட்ரோலிய தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக கேர்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 25 சதவீத பங்கை கேர்ன் இந்தியா வகித்து வருகிறது. அதனை 50 சதவீமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேர்ன் இந்தியா தெரிவித்துள்ளது.