உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளை முன்னேற விடாமல் தடுக்க உக்ரைன் ராணுவம் அழித்த சாலை, மேம்பாலம் உள்ளிட்ட நகர உள்கட்டமைப்புகள் மற்றும் ரஷ்யப் படைகளின் குண்டு மழையில் பல்வேறு பகுதிகளை உருக்குலைந்தன.
ஏறத்தாழ 50 சதவீத பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், போரை உடனடியாக நிறுத்தாவிட்டல் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீரழியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்தார்.