உக்ரைனுக்கு கூடுதலாக 53 மில்லியன் டாலர் மனிதாபிமான நிதி வழங்குவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் மூலம் 53 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். ரஷ்ய படையெடுப்பால் ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் உள்நாட்டிலே தவிப்பதாகவும், அவர்களுக்கு நேரடியாக உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
போரால் பிளவுபட்டுள்ள உக்ரைனுக்கு, உலக நாடுகளிலே இதுவரை இல்லாத அளவாக 159 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.