உக்ரைன் மீது ரஷ்யா ரசாயனத் தாக்குதல் நடத்தலாம் என இங்கிலாந்து அச்சம் தெரிவித்துள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரின் போது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்துள்ள இங்கிலாந்து அதிகாரிகள், உக்ரேனிய தேசியவாதிகள் கார்கிவின் வடமேற்கே ஒரு கிராமத்தில் ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதாக ரஷ்யா கூறியதையும் மேற்கோள் காட்டி உள்ளனர்.
ரஷ்யப் படைகள் பொய்யாகக் குற்றம் சாட்டுவதே இந்தத் திட்டதின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து அதிகாரிகள், இதனைக் காரணமாகக் கொண்டே ரஷ்யா ரசாயனத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.