உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
மேலும், 20 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலினால் உக்ரைனில் இதுவரை 37 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 50 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த ரஷ்யா, Mariupol உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.