மாஸ்டர் கார்டு, விசா கார்டுகளுக்கு மாற்றாக சீனாவின் யூனியன் பே கார்டுகளைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததையடுத்து மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டுகள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவித்தன. இதனையடுத்து Sberbank மற்றும் Alfa-Bank போன்ற ரஷ்ய வங்கிகள் சீனாவின் யூனியன் பே முறையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.
மேலும் ரோஸ்பேங்க், டின்காஃப் வங்கி மற்றும் மாஸ்கோ கிரெடிட் பேங்க் ஆகியவையும் யூனியன் பே கார்டுகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் எடுத்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.