மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.கல்லுபட்டியின் 10வது வார்டில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமியும், சுயேட்சையான பழனிச்செல்வியும் சம வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றியாளராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே நடந்த விசாரணையில், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்றைய விசாரணையில், நிர்பந்தத்தால் வெற்றியை மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். நிர்பந்தம் கொடுத்தது யார்? என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.