மக்கள் மருந்தகங்கள் மலிவு விலையில் மருந்துகளை வழங்கி மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் மருந்தக உரிமையாளர்கள், பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்தத் திட்டம் பயனாளிகளின் நலனில் அக்கறை காட்டுவதுடன், மருந்துக்கான செலவையும் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
உடலுக்கான மருந்தை வழங்குவதுடன், மக்கள் மனத்தில் உள்ள கவலைகளையும் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஏழைகள் இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்வதுடன், புற்றுநோய், நீரிழிவு, காசநோய்க்கான மருந்துகள் உட்பட எண்ணூற்றுக்கு மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவினரின் பிள்ளைகள் பயனடையும் வகையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதைப் போல் கட்டணத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.