ரஷ்ய ராணுவத்தின் 8 ராக்கெட்டுகள் ஒருசேர தாக்கியதில் வினிட்ஷா நகரின் பொது மக்கள் விமான நிலையம் பயன்படுத்த முடியாத அளவுக்கு உருக்குலைந்ததாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 12வது நாளை எட்டிய நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை நகரான வினிட்ஷாவை ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன.
ரஷ்யப் படைகளின் 8 ராக்கெட்டுகள் வினிட்ஷா விமான நிலையத்தில் விழுந்து வெடித்ததாகவும், பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலையம் உருக்குலைந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதேபோல் அரசு கட்டடம் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்வதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.