உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் மருத்துவக் கல்லூரியில் தலையில் மொட்டை அடித்தபடி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரிசையாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சீனியர் மாணவர்களால் முதலாமாண்டு மாணவர்கள் ரேகிங் செய்யப்பட்டனரா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹல்திவானி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 27 பேர் தலையில் மொட்டை அடிக்கப்பட்டு, கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து வரிசையாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்திற்குள்ளானது. அதேநேரம் கல்லூரியில் மாணவர்கள் மொட்டையடித்துக் கொள்வது சகஜம் என்றும், சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்ததாக புகார் ஏதும் வரவில்லை என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.