உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவ்வின் அண்டை நகரான கெர்சனில் தொடர் தாக்குதலை நடத்தி ரஷ்யப் படைகள் நகரை கைப்பற்றின. இந்நிலையில் கெர்சனில் உள்ள உக்ரைன் ராணுவ தளத்தை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நகரை சுற்றி நிற்கும் ரஷ்யப் படைகளை கண்டித்து உக்ரைன் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் உக்ரைன் கொடியை ஏந்திக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.