இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் தமது கலைமூலமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூரி நகரின் கடற்கரையில் அவர் உக்ரைன் -ரஷ்ய அதிபர்களின் உருவங்களுடன் போரை நிறுத்தக் கோரி மணல் சிற்பம் வடித்துள்ளார். போர் தேவையில்லை அமைதிதான் தேவை என்றும் அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் பல லட்சம் பேர் அகதிகளாக புலம் பெயர்ந்தும் உள்ள சூழலை மாற்றும்படி அவர் உலக நாடுகளின் தலைவர்களிடம் கலைவழியாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.