கீவ் நகரம் மீது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை
ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகரில் பதற்றம்
கார்கிவ், கெர்சனை தொடர்ந்து தலைநகர் கீவ்-ற்கு குறி.!
உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல் என ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகர் உட்பட உக்ரைனில் பெரும் பதற்றம்
கார்கிவ், கெர்சன் நகரங்களைத் தொடர்ந்து, கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்கிரம்
உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு ரஷ்யா தரப்பில் எச்சரிக்கை
உக்ரைன் உடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ரஷ்யாவின் எச்சரிக்கையால் பரபரப்பு
கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள்.!
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் உள்ள ஒல்வியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வங்கதேசத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலை ரஷ்ய படையின் ஏவுகணை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதில் கப்பலில் இருந்த பிஜூஷ் தத்தா என்ற மாலுமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் இருந்த மற்றவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் இர்பின் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த சுகோய் எஸ்.யு.30 ரக போர் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கீவுக்கு அருகே பறந்த போர் விமானத்தை தங்கள் வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோகிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அங்குள்ள எண்ணெய்க்கிடங்கு ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
அந்நகரில் காலை முதலே ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. அதில் அங்குள்ள எண்ணெய்க்கிடங்கை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அது கொளுந்துவிட்டு எரிந்தது. எண்ணெய்க்கிடங்கு தீப்பிடித்து எரிவதால் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அப்பகுதிவாசிகள் கவலையடைந்துள்ளனர்.