ரஷ்யாவின் அணுசக்தி பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை சோதனையை அமெரிக்கா தாமதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்தப் பதற்றமான தருணத்திர் அபாயங்களைக் குறைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை தாங்கள் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள மினிட்மேன் 3 என்ற ஏவுகணை 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. மணிக்கு சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஆழமான பதுங்கு குழிகளையும் தாக்கும் திறன் கொண்டது.