உக்ரைன் போர் மூன்றாவது உலகப் போராக மாறினால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதப் போராகவும் வெடிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த அவர் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மாற்று மூன்றாம் உலகப் போர் தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை சுட்டிக் காட்டினார்.
பொருளாதாரத் தடைகளை ரஷ்யா ஏற்கத்தயாராக இருப்பதாக கூறிய செர்கய் லாவ்ரோவ், ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்களுக்குக் கூட மேற்கத்திய நாடுகள் தடைவிதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.