உக்ரைன் - ரஷ்யா போரால் சர்வேத சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவசர தேவைக்காக கையிருப்பில் இருந்து 6 கோடி பீப்பாய் எண்ணெயை விடுவிக்க உள்ளதாக IEA எனப்படும் சர்வதேச எரிசக்தி முகமை அறிவித்துள்ளது.
கச்சா எண்ணை விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை சரிகட்டுவதற்காக அவசரகால கையிருப்பை எடுப்பதற்கு சர்வதேச எரிசக்தி முகமை நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்த அமைப்பில் இந்தியா உள்பட 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த 31 நாடுகளும் தற்போது 150 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை கையிருப்பில் வைத்துள்ளன.
6 கோடி பீப்பாய் எண்ணெயை விடுவிப்பதன் மூலம் கச்சா எண்ணெய்க்கான தேவை கணிசமாக குறைந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.