அமெரிக்கர்கள் இனி மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும், தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அங்கேயே விற்பனை செய்யப்படும் ஃபைசர் கொரோனா மாத்திரைகளை இலவசமாக பெற்றுச்செல்லலாம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை கூறிய பைடன், உலக அளவில் ஃபைசரின் கொரோனா மாத்திரைகளை அமெரிக்காவே அதிக அளவில் ஆர்டர் செய்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த மாதத்தில் 10 லட்சம் மாத்திரைகளையும், ஏப்ரல் மாதத்தில் அதை விட இரு மடங்கு அளவிலான மாத்திரைகளையும் ஃபைசர் நிறுவனம் வழங்க இருப்பதாக தெரிவித்த அவர், பைசரின் மாத்திரைகள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை 90 சதவீதம் குறைப்பதாகவும் கூறினார்.