உக்ரைனில் ரஷ்யப் படைகளை எதிர்த்து அமெரிக்க ராணுவம் போரிடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உக்ரைன் மீதான ரஷ்யப் போரில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார். அதேநேரத்தில் ரஷ்யப் படையினரை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
சுதந்திர உலகின் அடித்தளத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அசைக்க முயன்றுள்ளதாக பைடன் குற்றஞ்சாட்டினார். போலந்து, ருமேனியா, லாத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா ஆகிய நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யப் படையினர் முன்னேறுவதைத் தடுக்க அவற்றுக்கு அமெரிக்கப் படையினர் அனுப்பப்படுவர் எனத் தெரிவித்தார்.