உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 7-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இந்திய மற்றும் சரவதேச பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
போர் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வரும் நிலையிலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், காலை நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 849 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 397 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 209 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 547 புள்ளிகளாகவும் இருந்தன.
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.6 சதவீதம் வரையிலும் , ஜப்பான் பங்குச் சந்தையான நிக்கி 2 சதவீதம் வரையிலும் சரிந்தாக கூறப்படும் நிலையில், ஆசியாவின் முக்கிய பொருளாதார மையமாக கருதப்படும் ஹாங்காங்கின் பங்குச் சந்தையான ஹாங் செங் 1.1 சதவீதம் வரை சரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், போர் தொடங்கிய சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர் என்று இருந்த நிலையில், தற்போது 110 டாலரை தாண்டியுள்ளது.