உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்கள் நிச்சயமற்ற நிலையில் உயிரைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாளைய பொழுதைக் காண்போமா என்றே தெரியவில்லை என்று அவர்கள் மரண பயத்துடன் இருப்பதாகக் கூறுகின்றனர். எதிர்பாராத விதமாக இந்திய மாணவர் நவீனின் மரணம் அங்குள்ள மாணவர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
உயிர் பிழைக்க வேண்டிய அனைத்தையும் செய்து வருவதாகக் கூறுகின்றனர்.எங்கு நோக்கினும் பீரங்கிகள் குண்டுமழை பொழிவதாக மாணவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.