அணு ஆயுதப்போருக்கு வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் இதுதொடர்பாகக் கேட்டபோது, இதே போன்ற பதிலை பலமுறை கூறியுள்ளதாக அவர் பதிலளித்தார். உக்ரைன்மீது ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தலையிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே புதின் அரசு ரேடியோ ஆக்டிவ் ஆயுதங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய சம்பவத்தை வெள்ளைமாளிகை சுட்டிக் காட்டியுள்ளது.