ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் விசா இல்லாமல் உக்ரைனுக்கு வரலாம் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், எந்த நாட்டினரும் தங்கள் படையினருடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிடலாம் என செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மேலும், ராணுவத்துடன் இணைந்து போரிட விரும்புவோர் தங்களுக்கு ராணுவத்தில் அனுபவம் இருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தலைக்கவசம் மற்றும் உடற்கவசம் போன்றவற்றை சொந்தமாகவே கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த புதிய உத்தரவு நாட்டில் ராணுவ சட்டம் வாபஸ் பெறும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போர் காரணமாக உக்ரைனில் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது