ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் ஒருதலைபட்சமானது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.