உக்ரைனுக்குள் படைகளை நகர்த்தி வரும் ரஷ்யா, வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தந்தை என கருதப்படும் சக்தி அதிகரிக்கப்பட்ட தெர்மோபாரிக் (thermobaric) என்னும் வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணுகுண்டுக்கு அடுத்தப்படியாக மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவை இந்த வெப்ப அழுத்த வெடிகுண்டுகள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுக்குள் உள்ள அமிலம் மற்றும் எரிபொருள் கலவை வெடித்தால் சூப்பர் சோனிக் அலை உருவாகி மனிதர்கள் , கட்டடம் என எல்லாவற்றையும் அழிக்கும் என கூறப்படுகிறது.
கீவ் நகருக்குள் ரஷ்யா நகர்த்தி வரும் ராணுவ தளவாடங்களில் வெப்ப அழுத்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவும் TOS-1 வகை லான்சர்களும் (launcher) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை சிரியா மற்றும் செசன்யா போர்களில் ஏற்கனவே ரஷ்யா பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.