ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 813 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி கிலோவுக்கு ஆயிரத்து 100 ரூபாய் விலை அதிகரித்து 70 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது.