எரிபொருள் தீர்ந்த ராணுவ பீரங்கியை ரஷ்ய ராணுவ வீரர்கள் தள்ளி செல்வதை கண்ட உக்ரைன் குடிமகன் ஒருவர் ரஷ்யாவிற்கு செல்ல உதவி வேண்டுமா? என கேட்டு கிண்டல் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் சுமி நகரில் இருந்து கீவ் நோக்கி ரஷ்ய ராணுவ வீரர்கள் எரிபொருள் தீர்ந்த பீரங்கியை தள்ளிச்சென்றனர்.
அதனை கண்ட உக்ரேனியர் ஒருவர், ரஷ்யாவிற்கு திரும்பி செல்ல உதவி வேண்டுமா என கேட்ட நிலையில்,அதற்கு வேண்டாம் என ரஷ்யர்கள் சிரித்தபடி கூறினர். இந்த காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.