உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவத்தின் சிறப்பு படையினருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்களத்தில் இருக்கும் வீரர்களின் உண்மையான மற்றும் தன்னலமற்ற, குறைபாடற்ற சேவைக்கு நன்றி கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களாக ரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் எரிவாயுக் குழாய்க்கு வெடி வைத்ததோடு, உக்ரைனுக்கு தென்மேற்கே வாசில்கிவ் நகரத்தில் எண்ணெய் உற்பத்தி நிலையத்தையும் ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படை தாக்கி அழித்துள்ளது.
மேலும், உக்ரைனின் Kherson and Berdyansk நகரங்களையும் கைப்பற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.