உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள செர்னோபிலை கடும் சண்டைக்குப் பின் ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்னோபில் அணு உலை மற்றும் ஹாஸ்டொமெல் விமான நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹாஸ்டொமெல் நகர விமான நிலையத்திற்கு ரஷ்ய ஹெலிகாப்டர், மற்றும் போர் விமானங்களில் இருந்து பாராட்ரூப் வீரர்கள் இறங்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி தாக்குதலில் நடத்திய ரஷ்யாவின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் 7 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ள்ளார்.