உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய விமானப் படைகள் செர்னோபலை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அணு உலையான செர்னோபலை கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல்,வான், நிலம் என மூன்று முனைகளிலும் உக்ரைனை நோக்கி ரஷ்யப்படைகள் முன்னேறி வருகின்றன.
தலைநகர் கீவ்-வில் ரஷ்ய போர் ஹெலிகாப்டர்கள் தாழப்பறந்துச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் குண்டுமழை பொழிவதால் அச்சத்துடன் அங்குள்ள மெட்ரோ சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனிடையே 50 ரஷ்ய வீரர்களை கொன்றதாகவும் 5 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. பதிலுக்கு உக்ரைனின் 70 ராணுவ இலக்குகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் 11 விமான தளங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.