நேட்டோ படைகளின் வான் பாதுகாப்புக்காக 100 ஜெட் விமானங்களும் 120 கூட்டு நாடுகளின் போர்க்கப்பல்களும் மத்தியதரைக்கடல் பகுதியில் தயாராக இருப்பதாக நேட்டோ படைகளின் பொதுச்செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அடக்குமுறை ஒருபோதும் சுதந்திரத்தை வெல்ல முடியாது என்றும் அவர் எச்சரித்தார். சர்வதேச எல்லை விதிகளை மீறி வன்முறைத் தாக்குதல் தொடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறினார்.
நேட்டோ நாடுகளின் கூட்டுப் படைகளின் ராணுவத்தளபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் போரை நிறுத்துவதற்கான அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேட்டோ படைகளின் பொதுச்செயலாளர் ஸ்டோவலன்பெர்க் தெரிவித்தார்.