உக்ரைனில் சிந்தப்பதற்கே பயமுறுத்தும் வகையில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் Peter Maurer தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பெரியளவிலான உயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், நீர் நிலைகள், மின் நிலையங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியளவிலான மக்கள் இடப் பெயர்வுகள், குடும்ப பிரிவு, மக்கள் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.