மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்
உக்ரைன் மீது சைபர் தாக்குதல் - பெரும் அதிர்வலை
முக்கிய இணையதளங்கள் முடங்கியதால் பரபரப்பு
உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடங்கின.!
குண்டு வீச்சு மட்டுமின்றி உக்ரைன் மீது சைபர் தாக்குதல்.!
உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை - பெரும் பதற்றம்
வெடித்துச் சிதறும் குண்டுகளால் பேரொலிகள் எழுகின்றன
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது
உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
வழக்கமாக குண்டு வீசப்படும்போதும், பதுங்கு குழிகளில் பதுங்கி, ராணுவத்தினர், மக்கள் உயிர் பிழைப்பர்
உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம்
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது
உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், பெரும் பதற்றம்
கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன
உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா குண்டுவீசுவதாக தகவல்
உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு துறைமுக நகரான மரியூபோல் மீது ரஷ்யா குண்டு மழையால் பதற்றம்
கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது போர் விமானங்கள் மூலம், ரஷ்யா குண்டு வீசித் தாக்குதல்
உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா, சைபர் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு
உக்ரைன் அரசின் முக்கிய இணையதங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதால் அதிர்வலை
உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கம்
ரஷ்யாவின் சைபர் தாக்குதலில், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கம்
உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதங்களில் தகவல் அழிப்பு(Data Erasing) டூல் மால்வேர் மூலம் ரஷ்யா சைபர் தாக்குதல்