ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிப்பொழிவால், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குல்காமில் உள்ள பன்போரா பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியில் துடிப்பதாக குல்காம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பனிமூடிய சாலைகளுக்கு மத்தியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற போலீசார், கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர முடியாத சூழலில், போலீஸ் ஜீப்பிலேயே கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.