உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேரு நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் ஆடம்பர பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் அந்த குடும்பத்தினரை பிணைக்கைதிகளாகப் பிடித்து கொள்ளையடித்தனர்.
வீட்டுக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்திய அவர்கள் 25 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் தப்பிச் சென்றனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காண போலீசார் முயன்று வருகின்றனர்