தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உதவும் என தெரிவித்த பிரதமர் மோடி, அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. அதில் பேசிய அவர், நம் நாட்டின் இளம் தலைமுறை தான் வருங்கால தலைவர்கள் என்பதால் அவர்களை மேம்படுத்துவது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவது போன்றதாகும் என குறிபிட்டார்.
தாய் மொழியில் கல்வி கற்பது, குழந்தைகளின் மன வளர்ச்சியுடன் தொடர்புடையது என குறிப்பிட்ட பிரதமர், மருத்துவம், தொழில்நுட்ப கல்வி போன்றவை பல மாநிலங்களில் உள்ளூர் மொழியில் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.