உத்தரபிரதேசம், மணிப்பூர் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில், கூடுதல் நட்சத்திர பேச்சாளர்களை கட்சிகள் களமிறக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நான்கு கட்டமாகவும், மணிப்பூரில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரங்களுக்கான கட்டுபாடுகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களையும், மற்ற கட்சிகள் 20 பேச்சாளர்களையும் களமிறக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. நாளை மறுநாளுக்குள் நட்சத்திர பேச்சாளர்களின் பெயர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தலில் இருந்து நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.