மார்ச் 1ஆம் தேதி முதல் ஜப்பானில் வெளிநாட்டினர் வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை தவிர்த்து வணிக மற்றும் வியாபார நோக்கம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு வெளிநாட்டினர் ஜப்பான் வரலாம் என பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு அனுமதி தரும் வரை தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.