உக்ரைன் எல்லையில் நியாயமற்ற முறையில் குவித்துள்ள படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி பிரான்ஸ் ஆகிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 ரஷ்யாவின் நடவடிக்கை ஐரோப்பியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லை விதிகளை ரஷ்யா மீறுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், உக்ரைன் தனது ஜனநாயகத்தைக் காத்துக் கொள்ள துணை நிற்போம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.