கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் வெங்காயத்தின் விலை 22 விழுக்காடு குறைவாக விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த காரிப் பருவ வெங்காய வரத்து சீராக உள்ளதாகவும், ராபி பருவ வெங்காய வரத்து இது இதே நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் சேமிப்புக் கிட்டங்கிகளில் இருந்து மாநிலங்களுக்கு 2 லட்சம் டன் வெங்காயம் விநியோகிக்கப்பட்டதால் அதன் விலை நிலையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.